CRIME
“அச்சச்சோ.. நடுவானில் கோளாறு…” குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்.. 14 பேருக்கு நேர்ந்த கொடூரம்…நெஞ்சை உலுக்கும் விபத்து..!!
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான ராணுவ விமான விபத்தில், உயர் ராணுவ அதிகாரிகள் உட்பட 14-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கிக்விட் நகரிலிருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கிப் பயணித்த அந்த விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கெங்கே பகுதியில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் காங்கோ நாட்டின் ராணுவ நீதித்துறையின் மிக உயரிய பொறுப்புகளில் இருந்த ஜோசப் முடோம்போ காடலாயி தியண்டே என்ற உயர் ராணுவ நீதிமன்றத் தலைவர் மற்றும் லூசியன்-ரினே லிகுலியா பகுமி என்ற ராணுவத்தின் ஆடிட்டர் ஜெனரல் ஆகிய இரு முக்கிய அதிகாரிகளும் அடங்குவர். இந்த விபத்து குறித்து அதிபர் பெலிக்ஸ் ஷிசேகேடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உடனடி விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
