LATEST NEWS
“இதெல்லாம் சாத்தியமே இல்ல..” 11,695 துண்டுகளை இணைத்து உலக வரைபடத்தையே கட்டி முடிச்ச நண்பர்கள்.. பிரெண்ட்ஷிப் பவரால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த மாஸ் சம்பவம்!
உலகிலேயே வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய 2D லெகோ செட் என்ற பெருமையைப் பெற்றது ‘லெகோ வேர்ல்டு மேப்’. மொத்தம் 11,695 சிறிய பாகங்களைக் கொண்ட இந்த பிரம்மாண்டமான உலக வரைபடத்தை, அமெரிக்காவின் கலிபோர்னியா பே ஏரியாவைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் வெறும் 5 மணி நேரத்திற்குள் முழுமையாகக் கட்டமைத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். சிங்கப்பூரைச் சேர்ந்த அதீனா லியாங் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த செவி ஸ்விப்ட் ஆகிய இருவரே இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திய நண்பர்கள் ஆவர்.
கடந்த ஏப்ரல் 12 அன்று, கலிபோர்னியாவில் உள்ள ‘பிரிக் பை பிரிக் டாய்ஸ்’ என்ற லெகோ கடையில் இந்த உலக சாதனை முயற்சி நடைபெற்றது. லெகோ உலக வரைபடத்தை மிக வேகமாகக் கட்டமைத்த இருவர் அடங்கிய குழு என்ற பிரிவின் கீழ், இவர்கள் இருவரும் இணைந்து 4 மணி நேரம் 59 நிமிடங்கள் 51 வினாடிகளில் இந்த வரைபடத்தை முழுமையாக முடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோடி ஒன்று 9 மணி நேரம் 15 நிமிடங்களில் இந்த வரைபடத்தை அமைத்து சாதனை படைத்திருந்தது. அந்த முந்தைய சாதனையை விட சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக மிக விரைவாக முடித்து இந்த நண்பர்கள் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனர். லெகோ விளையாட்டுப் பொருட்கள் மீதான ஆர்வம் மற்றும் காதலே தங்களை சிறந்த நண்பர்களாக மாற்றியதாக இவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
