“த.வெ.க ஆட்சியில பா.ஜ.க அமைச்சர் இருக்காரா..?!” யாரு தெரியுமா..? அப்பாவு கிளப்பிய புது பூகம்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“த.வெ.க ஆட்சியில பா.ஜ.க அமைச்சர் இருக்காரா..?!” யாரு தெரியுமா..? அப்பாவு கிளப்பிய புது பூகம்பம்..!!

Published

on

முன்னாள் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- வெற்றி பெற்றவர்கள் 50 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள். இன்னொரு நபர் வெற்றி பெற்றால் பெட்டி வாங்கலாம் என்று நினைத்துள்ளார். சுகன்யா மட்டும்தான் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த திட்டங்களை நினைத்து பார்க்கிறோம். மாதம் ஆயிரம் ரூபாய் தந்தாங்க என தாராபுரம் மக்கள் கூறுகிறார்கள்.

மின்சார கட்டணம் 2 ஆயிரம் ரூபாய் கட்டியவர்களுக்கு தற்போது 8 ஆயிரம் ரூபாய் வருகிறது. எல்லாவற்றையும் தனியார் மையம் ஆக்க ஆரம்பித்து விட்டார்கள். மின் கட்டணம் கணக்கெடுப்பதற்கு தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். ஐயுஎம்எல்-க்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். காங்கிரஸ்க்கு அமைச்சர்கள் இருக்காங்க.

Advertisement

பாஜக-வுக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். உங்களுக்கு தெரியுமா?. அவர்தான் நிர்மல் குமார். மின்துறையை அதானிக்கு கொடுப்பதற்காகவே அந்த பதவியை அவருக்கு வாங்கி கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் வெளித்தோற்றத்திற்கு நடப்பது த.வெ.க. ஆட்சி. நடப்பது பா.ஜ.க. ஆட்சி. அதில் ஒரிஜினல் பாஜக மந்திரியாக செயல்படுவது நிர்மல் குமார்.தமிழ்நாட்டில் மக்களை பற்றி அவர்கள் எந்த கவலையும் படமாட்டார்கள். மின் கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது பாருங்க. மின்தடை. இதையெல்லாம் ஒரு செயற்கையாக பண்றாங்க. இதை அதானிக்கு விற்பதற்காக செய்றாங்க. சீக்கிரம் விற்றுவிடுவார்கள். சுரங்கம் அவ்வளவும் ரெட்டி கேங்கிற்கு கொடுத்தாச்சு. இடைத்தேர்தல் முடிந்த பின்னர் எல்லா இடத்திற்கும் வந்து விடுவார்கள். போக்குவரத்தை உ.பி. நிறுவத்திற்க விற்பனை செய்யப்பட்டுள்ளது. எதுவும் மிஞ்சாது. விஜய் மட்டும்தான் இருப்பாரு. அவர் ஒரு இடத்தை பார்க்க போனாரு. அங்கதான் அவருக்கு இடம் ஒதுக்கியிருக்கு. இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in