LATEST NEWS
“பேருந்தை ஏன் நிறுத்தவில்லை..?” கேள்வி கேட்ட DU மாணவர்.. ஆவேசமாக வந்து தடிமாட்டு ஓட்டுநர் செய்த பகீர் காரியம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
டெல்லியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகளுக்காகப் பேருந்தை நிறுத்தாதது குறித்துக் கேள்வி எழுப்பிய டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவரை, அரசுப் பேருந்து ஓட்டுநர் நடுரோட்டில் பளார் எனத் தட்டுகின்ற அநாகரிகமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் உன்னப் பிரதாப் என்ற மாணவர், மாடல் டவுன் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது, வழியில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் சிலர் பேருந்தை நிறுத்துமாறு கைகாட்டிய போதிலும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் அராஜகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இதுகுறித்து நடத்துநரிடமும், ஓட்டுநரிடமும் அந்த மாணவர் தட்டிக்கேட்ட போது, அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
https://www.instagram.com/reel/Ddqz3_xpiQv/?utm_source=ig_embed&ig_rid=Al_V5OzwS8OlBM0f8IVtkbC
இந்த வாக்குவாதத்தின் போது நடத்துநர் மிகவும் அநாகரிகமான வார்த்தைகளால் மாணவரைப் பேசியதுடன், ஓட்டுநர் தனது சீட்டை விட்டு ஆவேசமாக எழுந்து வந்து “உன் வேலையைப் பார்த்துட்டு போ” என்று கூறி மாணவரின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். தனக்கு நேர்ந்த இந்த அநியாயத்தை அந்த மாணவர் தனது மொபைல் கேமராவில் முழுமையாகப் பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுத் தனக்கு நீதி வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஆதரவாகப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருவதுடன், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அந்தத் தடிமாட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
