LATEST NEWS
“வாவ்.. மாணவர்கள் கொண்டு வந்த விசித்திரப் பரிசு..” பிரித்துப் பார்த்த ஆசிரியைக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. நெட்டிசன்களை உருகவைத்த கியூட் வீடியோ..!!
கிராமப்புற அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் ஏழை மாணவர்கள் தங்களது ஆசிரியைக்குச் புடவையில் சுருட்டி எடுத்து வந்த விசித்திரமான அன்புப் பரிசு குறித்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகிறது. ஸ்ருதி சவுகான் இராஜாவத் என்ற அந்த அரசுப் பள்ளி ஆசிரியை வகுப்பறையில் இருந்த போது, கிராமத்து மாணவர்கள் சிலர் ஒரு பெரிய துணி மூட்டையைத் தூக்கிக்கொண்டு வந்து அவரது மேஜை மீது வைத்துள்ளனர். அந்த ஆசிரியை ஆச்சரியத்துடன் அந்தப் புடவை மூட்டையைப் பிரித்துப் பார்த்த போது, அதற்குள் மாணவர்கள் தங்களது தோட்டத்தில் விளைந்த 6 பெரிய சுரைக்காய்களை ஆசிரியைக்காகப் பரிசாகக் கொண்டு வந்தது தெரியவந்தது.
https://www.instagram.com/reel/Ddr_FIuzLC0/?utm_source=ig_embed&ig_rid=A6dMD1jyEft_TTcCkeXgJSL
மாணவர்களின் இந்தத் தூய்மையான அன்பைக் கண்டு நெகிழ்ந்துபோன ஆசிரியை, “இவ்வளவு சுரைக்காய்களை என்னால் 10 நாட்களில் கூட சமைத்துச் சாப்பிட முடியாது” என்று கலகலப்புடன் தழுதழுத்தக் குரலில் கூறுகிறார். இன்ஸ்டாகிராமில் ‘மறைமுகச் சம்பளம்’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த கியூட்டான வீடியோவிற்குத் தற்பொழுது நெட்டிசன்கள் தங்களது லைக்குகளைக் குவித்து வருகின்றனர். விலையுயர்ந்த பரிசுகளை விட ஒரு கிராமத்து விவசாயப் பிள்ளைகளின் இந்தத் தூய்மையான அன்புதான் ஒரு ஆசிரியருக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த ‘மேல் வருமானம்’ என்றும், இத்தகைய பாசம் கொடுத்து வைத்த நல்ல ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் பயனர்கள் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
