அய்யோ கொடுமையே.. “குழந்தைகளுக்குக் காட்ட ஆசையா வீட்டிக்குக் கொண்டு வந்தார்…” அடுத்த நொடியே நடந்த கொடூரம்..! 10 ஆண்டு அனுபவம் இருந்தும் பறிபோன உயிர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே.. “குழந்தைகளுக்குக் காட்ட ஆசையா வீட்டிக்குக் கொண்டு வந்தார்…” அடுத்த நொடியே நடந்த கொடூரம்..! 10 ஆண்டு அனுபவம் இருந்தும் பறிபோன உயிர்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் பியாவ்ரா நகரில், விஷமிக்க கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் 10 ஆண்டுகள் அனுபவமிக்க 40 வயதான பாம்பு பிடி வீரர் பிரவேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். திங்கள்கிழமை இரவு பியாவ்ரா நகரின் சுதாலியா ரோடு பகுதியில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று புகுந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பிரவேஷ், அதனைப் பாதுகாப்பாகப் பிடித்தார். பின்னர் அந்தப் பாம்பை வீட்டிற்கு எடுத்து வந்து தனது குழந்தைகளிடம் காண்பித்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த நச்சுப்பாம்பு அவரைத் தீண்டியது.

பாம்பு கடித்த ஆரம்பத்தில் அதனைப் பெரிதாகக் கருதாத பிரவேஷ், உடனடியாக எவ்வித சிகிச்சையும் பெறாமல் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவருக்குக் கடும் நெஞ்சு படபடப்பும் உடல் அசௌகரியமும் ஏற்பட்டதை அடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக போபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பரிந்துரைக்கப்பட்டார்; எனினும், போபால் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

Advertisement

கடந்த 10 ஆண்டுகளாகப் பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பிரவேஷ், இதுவரை பல பெரிய மற்றும் ஆபத்தான பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டுள்ளார். உயிரிழந்த பிரவேஷிற்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துப் பேசிய பியாவ்ரா நகரக் காவல் ஆய்வாளர் சிவராஜ் சிங் சவுகான், பிரவேஷின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக் குடும்பத்தினர் மறுத்ததைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in