“ரசகுல்லா சாப்பிடுடா”னு கொடுத்த நண்பன்.. வாயில் வைத்ததும் வெடித்த வெடிகுண்டு..! கதறி துடித்த குடும்பம்.. நடந்தது என்ன..? பதற வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ரசகுல்லா சாப்பிடுடா”னு கொடுத்த நண்பன்.. வாயில் வைத்ததும் வெடித்த வெடிகுண்டு..! கதறி துடித்த குடும்பம்.. நடந்தது என்ன..? பதற வைக்கும் சம்பவம்..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள படரியா சாண்டா கிராமத்தில் ஒரு நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 35 வயதான ராஜேந்திர பரௌதியா என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு உணவு அருந்திவிட்டுத் தனது வீட்டு முற்றத்தில் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராம் பகத் பரௌதியா என்பவர், ராஜேந்திரனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டை ‘ரசகுல்லா’ இனிப்பு என்று கூறி சாப்பிடக் கொடுத்துள்ளார்.

அதன் உண்மைத் தன்மையை அறியாத ராஜேந்திரன், அதை நிஜமாகவே ரசகுல்லா என்று நம்பி வாயில் போட்டுக் கடித்துள்ளார். அவர் பற்களால் அழுத்திய உடனேயே, அந்த வெடிகுண்டு அவரது வாய்க்குள்ளேயே பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அவரது தாடைப் பகுதி முற்றிலும் சிதைந்து படுகாயமடைந்தார். சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், படுகாயமடைந்த ராஜேந்திரனை ஆட்டோ மூலம் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்த கோட்வாலி காவல் நிலைய அதிகாரிகள், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளி ராம் பகத் பரௌதியா மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 105 மற்றும் வெடிபொருள் சட்டப் பிரிவுகள் 3 மற்றும் 4-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். குற்றவாளிக்கு இந்த நாட்டு வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது மற்றும் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in