CRIME
“ரூ.130 கோடி நிலத்தை ரூ.70 கோடிக்கு விற்று செட்டில்மென்ட்” பாலியல் வழக்கு FIR-ல் பெயர் வராமல் தப்ப ஓடிய தொழிலதிபர் ஜெம் வீரமணி.. அதிர்ச்சித் தகவல் அம்பலம்..!!
ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயரைச் சேர்க்காமல் இருக்க, அவர் சுமார் 70 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை மறைப்பதற்காக முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகாரத் தொடர்பில் இருந்தவர்கள் அவரிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலருக்கும் இந்த விநியோகத்தில் தொடர்பிருப்பதாகத் தெரிகிறது. இந்த செட்டில்மென்ட்டிற்காக, சென்னை ஈசிஆர் மற்றும் உதகை பகுதிகளில் உள்ள சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, வெறும் 70 கோடி ரூபாய்க்கு விற்றுப் பணமாக்கியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் சென்னையைச் சேர்ந்த பிரபல ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரின் மகன் மூலமாகப் பலருக்கும் செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, அந்த ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகனைக் கைது செய்ய போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
