LATEST NEWS
“சப்பளை செஞ்ச சாந்தியே வச்ச ஆப்பு” தொழிலதிபர் வீரமணி வழக்கில் சிக்கப்போகும் 2 முக்கிய புள்ளிகள்… அதிரவைக்கும் பென் டிரைவ் ரகசியம் அம்பலம்..!!
தொழிலதிபர் வீரமணி சம்பந்தப்பட்ட போக்சோ மற்றும் பல கோடி ரூபாய் லஞ்சப் புகார் விவகாரத்தில், அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிங் ஆகியோரே இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களாக மாறியுள்ளனர். சாந்தி பராமரித்து வந்த வீட்டில் வைத்து சிறுமிகளிடம் வீரமணி செய்த தவறான செயல்கள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. அந்த வீடியோ காட்சிகளை வீரமணிக்குத் தெரியாமல் ‘பென் டிரைவ்களில்’ பதிவு செய்த சாந்தி தம்பதியினர், அதனை வைத்து தொழிலதிபரிடம் கோடிக்கணக்கில் பணம் பறிக்கத் ரகசியமாகத் திட்டம் தீட்டியுள்ளனர்.
இந்த மிரட்டல் திட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் மற்றும் தனி கட்சி நடத்தும் செல்வாக்கான தலைவர் ஒருவர் என இரண்டு முக்கிய அரசியல் புள்ளிகள் களமிறங்கியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்குப் பயந்த வீரமணி முதற்கட்டமாக ரூ. 10 கோடி பணத்தைக் கொடுத்துள்ளார். இதில் ரூ. 8 கோடியை அந்த அரசியல் பிரமுகர்கள் பங்கிட்டுக் கொள்ள, சாந்தி தம்பதிக்கு ரூ. 2 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த சாந்தி, ஆத்திரத்தில் அந்த வீடியோ ஆதாரங்கள் அடங்கிய ‘பென் டிரைவ்களை’ தன்னார்வலர்கள் மூலமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்க, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாறியுள்ளது.
வழக்கு விபசார தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு, அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் வழக்கிலிருந்து காப்பாற்றுவதாகக் கூறி வீரமணியிடம் ரூ. 60 கோடி வரை கறந்ததாகக் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனது ரூ. 80 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்று வீரமணி பணத்தைக் கொடுத்துள்ளார். இந்த ரூ. 60 கோடி யார் யாருக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது என்ற துல்லியமான விவரங்கள் வீரமணியின் தனிப்பட்ட டைரியில் இடம்பெற்றுள்ளதாகவும், இது குறித்த ரகசியத் தகவல்கள் தற்போது கசிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, போக்சோ வழக்கு ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மொத்தமாக ரூ. 70 கோடி பணம் கைமாறிய விவகாரம் குறித்துக் காவல் துறை மற்றும் அரசுத் தரப்பில் தீவிர விசாரணை முடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த இரண்டு அரசியல் பிரமுகர்கள், லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் உயர் காவல் அதிகாரி மற்றும் இடைத்தரகர்கள் மீது ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் போது, இந்த வழக்கில் தொடர்புடைய பல முக்கியப் புள்ளிகளின் கைது நடவடிக்கை உறுதி செய்யப்படும் என அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
