CRIME
ஜெம் வீரமணி பெட் ரூமில் ரகசிய கேமரா பொருத்தி… அந்த காட்சியை கணவனோடு சேர்ந்து பார்த்து ரசித்த சாந்தி… வெளியான திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்..!!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் தற்போது போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைதாகியுள்ள ஜெம் வீரமணியின் தோழியான சாந்தி, அவரிடம் இருந்து தாங்கள் மிரட்டிப் பணம் பறித்த உண்மைகளை போலீசாரிடம் வாக்குமூலமாக ஒப்புக்கொண்டுள்ளார். சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரும் இணைந்து இந்தத் திட்டத்தைத் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாந்தியும் அவரது கணவரும் சேர்ந்து ஜெம் வீரமணியின் படுக்கையறையில் ரகசியக் கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். அதன் மூலம், அங்கு சிறுமிகள் சீரழிக்கப்பட்ட கொடூரக் காட்சிகளை அவர்கள் ரகசியமாகப் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட அசிங்கமான வீடியோ காட்சிகளை, தங்களது வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் தம்பதியினர் இருவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசித்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை சாந்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த ரகசிய வீடியோ ஆதாரங்களை வைத்து ஜெம் வீரமணியை அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இந்த மிரட்டலுக்குப் பயந்து, கிழக்கு கடற்கரை சாலையில் தனக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை வீரமணி விற்க நேரிட்டுள்ளது. அவ்வாறு நிலத்தை விற்று வந்த பெரும் தொகையை சாந்தியும் அவரது கணவரும் மிரட்டிப் பறித்துக் கொண்டுள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
