LATEST NEWS
கொழுப்பு தான உனக்கு..? லண்டன்ல என்ன ஆச்சு..? ஈர்க்க போனாரு.. மீண்டும் முதல்வரை இரட்டை அர்த்தத்தில் பேசிய உதயநிதி..!!
மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகை த்ரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து மீண்டும் மறைமுகமாகக் குறிப்பிட்டுக் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரசார மேடையில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் திடீரென ‘லண்டன்’ என்று கத்தியுள்ளார்.
அத்தொண்டரின் குரலைக் கேட்ட உதயநிதி ஸ்டாலின் உடனடியாக, “உனக்கு கொழுப்பு தான?” என்று மேடையிலிருந்தே கிண்டலாகக் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, “லண்டன்ல என்ன ஆச்சு? எனக்குத் தெரியாது. அவர் அங்கு ஈர்க்கச் சென்றார்” என்று தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் லண்டன் பயணத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி சில நிமிடங்கள் மேடையில் சிரித்துள்ளார்.
அதன் பின்னர் தனது பேச்சை மாற்றிய உதயநிதி ஸ்டாலின், அவர் அங்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கச் சென்றதாகக் கூறினார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் லண்டன் பயணம் குறித்தும், நடிகை த்ரிஷா குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வரும் சூழலில், மதுராந்தகம் பிரசாரக் களத்தில் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு இரட்டை அர்த்தத்தில் சிரித்துப் பேசியுள்ளது தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே தற்பொழுது கடுமையான விவாதங்களையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
