LATEST NEWS
இபிஎஸ்-ஐ வெறுத்து தான்.. “மனித தெய்வங்கள்” இருக்கும் தவெக-வில் இணைந்தேன் – சத்யபாமா ஓபன் டாக்..!!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தான் அதிமுகவை விட்டு வெளியேறியதற்கான காரணம் குறித்துப் பேசிய அவர், “நான் வெறுப்பது அம்மாவின் இயக்கத்தை அல்ல; அதிமுகவை வழிநடத்தும் எடப்பாடியைத்தான்” என்று மேடையில் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தற்போதைய தலைமைப் பிடிக்காமல் தான் அந்த இயக்கத்தை விட்டு வெளியில் வந்ததாகக் குறிப்பிட்ட சத்யபாமா, தான் காரியத்திற்காகவோ அல்லது இயக்கத்திற்குத் துரோகம் செய்யவோ வெளியில் வரவில்லை என்று விளக்கமளித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய செயல்பாடுகள்தான், தன்னை மாற்றுப் பாதைக்குக் கொண்டு சேர்த்தது என்றும் அவர் மேடையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தரம் தாழ்ந்து செயல்பட்டதால்தான், தற்போது ‘மனித தெய்வங்கள்’ இருக்கும் இயக்கத்தில் தான் சேர்ந்திருப்பதாகக் கூறிய சத்யபாமா, இதற்காகத் தனது நன்றியையும் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிவித்துக் கொள்வதாகக் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். சன் நியூஸ் ஊடகத்தின் இந்தப் பதிவு தாராபுரம் தேர்தல் களத்தில் அதிமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
