LATEST NEWS
#BREAKING: ஜெம் வீரமணி போக்சோ வழக்கு – சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு திமுக புகார் மனு..!!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவருக்கும் ‘சம்மன்’ அனுப்பி, அவர்களிடம் உள்ள ஆதாரங்களைப் பெற வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் இந்த அதிகாரப்பூர்வப் புகார் மனுவை அளித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆளுங்கட்சியான தவெக-வின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் மீது, எதிர்க்கட்சியான திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு நேரடியாகப் புகார் அளித்துள்ளதால், இரு கட்சிகளுக்கும் இடையேயான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
