CRIME
கொலைகாரி..! வீட்டுக்குள்ளே இருந்தா எப்படி..? கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்… அடித்துக் கொன்று சடலத்தை தோட்டத்தில் வீசிய பலே மனைவி..!!
தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே கடந்த 10-ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (50) என்பவர் தோட்டம் ஒன்றில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இலத்தூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தின் அருகே இருந்த 26 கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்து சென்ற ஒரு வாடகை காரின் பதிவு எண்ணை வைத்து கொலையாளியைக் கண்டுபிடித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலையுண்ட அப்துல் ரகுமானின் மனைவி அம்சா நிஷாவிற்கும் (43), இசை இந்திரகுமார் (36) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்தது தெரியவந்தது. சமீபகாலமாக அப்துல் ரகுமான் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், தங்களது தொடர்பிற்கு இடையூறாக இருப்பதாகக் கருதி அவரைக் கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, புதிய கட்டிடத்திற்கு ரோலிங் ஷட்டர் அமைக்க அளவெடுக்க வேண்டும் எனக் கூறி, இசை இந்திரகுமார் அவரைத் தனியாக காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தோட்டத்தில் இருந்தபோது, அப்துல் ரகுமான் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கைத் தொடர்ந்து, இசை இந்திரகுமார் மற்றும் அவரது மனைவி அம்சா நிஷா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
