LATEST NEWS
ரூ.80 கோடி சொத்து விற்பனை… ரூ.23 கோடி தங்கம் கைமாறியதா..? ஜெம் வீரமணி வழக்கில் சிக்கிய பிரகாஷை தூக்க லண்டன் செல்லும் SIT குழு..!!
ஜெம் வீரமணி வழக்கில், லண்டனில் தலைமறைவாக இருக்கும் SRMU கண்ணையாவின் மகன் பிரகாஷைக் கைது செய்ய சிறப்பு விசாரணைக் குழு (SIT) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சில அரசு அதிகாரிகளுக்குப் பணம் கைமாறியது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், பிரகாஷுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
SRMU கண்ணையாவின் மகன் பிரகாஷ் மூலமாகவே, ஜெம் வீரமணியின் ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் விற்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு விற்கப்பட்ட சொத்துக்களின் பணத்தைக் கொண்டு பல்வேறு நபர்களுக்கான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் செட்டில்மெண்ட்டுகள் செய்து முடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெம் வீரமணி மீதான வழக்கை முழுமையாக முடித்து வைப்பதற்காக, ரூ.23 கோடி ரூபாய்க்குத் தங்கம் வாங்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் தங்கப் பிரகாஷ் மூலமாகச் சில முக்கிய அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சித் தகவல் குறித்துத் தற்போது சிறப்பு விசாரணைக்குழு தீவிரமாக விசாரித்து வருகிறது.
