“என் ஆளு வர்ற வரைக்கும் கீழே வர மாட்டேன்..” 250 அடி டவரில் ஏறி அடம்பிடித்த காதலி… 3 மணி நேரமா நடந்த ஹை-வோல்டேஜ் டிராமா.. பதறிப்போன போலிஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் ஆளு வர்ற வரைக்கும் கீழே வர மாட்டேன்..” 250 அடி டவரில் ஏறி அடம்பிடித்த காதலி… 3 மணி நேரமா நடந்த ஹை-வோல்டேஜ் டிராமா.. பதறிப்போன போலிஸ்..!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், தனது காதலனை நேரில் வரவழைப்பதற்காக இளம்பெண் ஒருவர் சுமார் 250 அடி உயர செல்போன் டவரில் ஏறி அமர்ந்து கொண்டு அதிகாலை முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பாகலி-சாப்தா பாதையில் அமைந்திருந்த இந்த செல்போன் டவரில் பெண் ஏறியிருப்பதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகலி காவல் நிலைய அதிகாரிகளும் நிர்வாகக் குழுவினரும் மைக்கில் பேசி அப்பெண்ணை கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பெண் டவரின் உச்சியிலேயே அமர்ந்து கொண்டு கீழே வர மறுத்துவிட்டார்.

டவரின் மேலே இருந்தபடி அந்தப் பெண், கல்லில் கட்டி 4 கடிதங்களைக் கீழே தூக்கி எறிந்தார். அதில், தானும் தன் காதலனும் நீதிமன்றத் திருமணம் (Court Marriage) செய்து கொண்டதாகவும், ஆனால் தனது குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது செல்போனைப் பறித்து வைத்துக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் “நேரம் கடந்து கொண்டிருக்கிறது, உடனே எனது காதலனை இங்கு வரவழையுங்கள்” என்றும் அதில் எழுதியிருந்தார். காவல்துறையினர் காதலனின் தந்தை மற்றும் சகோதரனை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், காதலன் நேரில் வராமல் கீழே இறங்க மாட்டேன் என்பதில் அப்பெண் உறுதியாக இருந்தார்.

Advertisement

இறுதியில், மாலை 6:10 மணியளவில் அப்பெண்ணின் காதலன் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். காதலனைக் கண்டதும் அமைதியடைந்த அப்பெண், மெதுவாக டவரில் இருந்து கீழே இறங்கத் தொடங்கினார். மாலை 6:55 மணியளவில் அவர் பாதுகாப்பாகக் கீழே கொண்டுவரப்பட்டு, உடனடியாக பாகலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். குடும்பத்தினரின் எதிர்ப்பும், செல்போனைப் பறித்த கோபமுமே அப்பெண்ணை இந்த முடிவுக்குத் தள்ளியதாகக் கூறிய காவல்துறையினர், தற்போது இரு வீட்டாரையும் அழைத்து கவுன்சிலிங் வழங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in