LATEST NEWS
“இன்னைக்கு நான் ஒரு பொண்ணு…” நள்ளிரவில் களமிறங்கிய வாலிபர்… ஆண்கள் செய்த கொடூரம்.. அரசாங்கத்தின் பாதுகாப்பு முகமூடியைக் கிழித்த அந்த 13 நொடி வீடியோ..!!
டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் உள்ளது என்பதைச் சோதிப்பதற்காக, ஒரு ஆண் கன்டென்ட் கிரியேட்டர் இரவு நேரத்தில் பெண்களைப் போல ‘பிராக்’ ஆடை அணிந்து சோதனை நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘BeJaintle’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தும் அந்த வாலிபர், பெண்களின் ஆடையை அணிந்து, மேக்கப் செய்து, தனது தாடியை மறைக்க முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கையில் பெண்களுக்கான கைப்பையுடன் நள்ளிரவில் டெல்லி வீதிகளில் இறங்கியுள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த அவரது நண்பர்கள், அங்கு நடக்கும் சம்பவங்களை ரகசியமாகக் கேமராவில் பதிவு செய்துள்ளனர்.
https://www.instagram.com/reel/DdWhNe0z3DF/?utm_source=ig_embed&ig_rid=AlCrNLVjAXLG17i8ObrDFho
அவர் ஸ்கூட்டரில் டெல்லி சாலைகளில் செல்லத் தொடங்கிய உடனே, அங்குள்ள ஆண்கள் அவரைத் தொடர்ச்சியாக முறைத்துப் பார்ப்பதும், பின் தொடர்வதும் கேமராவில் பதிவாகியுள்ளது. சைக்கிள், ஆட்டோ, கார் மற்றும் ஸ்கூட்டர்களில் வந்த பல ஆண்கள் பயமே இல்லாமல் அந்த வாலிபரைத் தொடர்ந்து துரத்திச் சென்று தொல்லை கொடுத்துள்ளனர். டெல்லியில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்படும் அனைத்து வாதங்களும் வெறும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அதிர்ச்சி வீடியோ, இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
