LATEST NEWS
அமைச்சர் வந்தா எங்க பிள்ளைங்க சாகணுமா..? ஆய்வுக்கு அமைச்சர் வந்ததால்… காய்ச்சல் குழந்தைக்குச் சிகிச்சையளிக்க மறுத்த அரசு மருத்துவமனை… கொந்தளித்த பெற்றோர்கள்..!!
கேரள மாநிலம் தொடுபுழா அரசு மருத்துவமனையில் அமைச்சரின் திடீர் ஆய்வு காரணமாக, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்குச் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பிய அதிர்ச்சிச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் வருகையை முன்னிட்டு மருத்துவக் கட்டமைப்பு முடங்கியதால் இந்த அவலம் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைக்குத் தீவிர காய்ச்சல் பாதிப்புடன் வந்த குழந்தையை அனுமதிப்பதற்காக அவசர சிகிச்சைப் பிரிவிற்குப் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அதே நேரத்தில் அமைச்சர் அங்கு ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்ததால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அமைச்சருடன் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் நீண்ட நேரம் காத்திருந்தும் குழந்தைக்கு உரிய நேரத்தில் முதலுதவி கூட வழங்கப்படவில்லை எனப் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவமனை நிர்வாகம், தங்களால் தற்பொழுது சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறி, அவர்களைக் கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தித் திருப்பி அனுப்பியுள்ளது. அமைச்சரின் விளம்பர அரசியலுக்காகக் குழந்தையின் உயிர் பந்தாடப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராகத் தங்களின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
