“திக் திக் நிமிடங்கள்.. ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு..” குளித்து கொண்டிருந்த 5 பேருக்கு நேர்ந்த விபரீதம்.. கேரளாவை உலுக்கிய சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திக் திக் நிமிடங்கள்.. ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு..” குளித்து கொண்டிருந்த 5 பேருக்கு நேர்ந்த விபரீதம்.. கேரளாவை உலுக்கிய சோக சம்பவம்..!!

Published

on

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் உள்ள கொட்டப்புழா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை ஆற்றின் மேல்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, சில நிமிடங்களிலேயே ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஆறு பேர் எதிர்பாராத விதமாக அடித்துச் செல்லப்பட்டனர். இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் தொடங்கப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின் மூலம் மேலும் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ள விபத்தில் சிக்கிய சஜிதா (26) என்ற பெண் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அவரைத் தேடும் பணிகள் ஆற்றில் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றன. காடுகளுக்குள் பெய்யும் மழையால் ஆறுகளில் நொடிப் பொழுதில் வெள்ளம் பாய்ந்து வரும் என்பதால், மழைக்காலங்களில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in