“என் செக்யூரிட்டி வண்டியை எடுங்க..!” விபத்தில் துடித்த இளைஞருக்காக முதலமைச்சர் செய்த செய்த வேற லெவல் காரியம்.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் செக்யூரிட்டி வண்டியை எடுங்க..!” விபத்தில் துடித்த இளைஞருக்காக முதலமைச்சர் செய்த செய்த வேற லெவல் காரியம்.. வைரல் வீடியோ..!!

Published

on

கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன், கொச்சி கன்டெய்னர் சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரைத் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை எர்ணாகுளம் கன்டெய்னர் சாலையில் முதலமைச்சரின் கார் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, அங்கே பைக் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் சாலையில் விழுந்து கிடப்பதைக் கவனித்துள்ளார். உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்த உத்தரவிட்ட முதலமைச்சர், சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளை விட மனித உயிரே முக்கியம் எனக் கருதிய முதலமைச்சர் சதீசன், காயம் அடைந்த இளைஞரைத் தனக்கு முன்னால் செல்லும் காவல்துறையின் பைலட் வாகனத்திலேயே அவசர ஆம்புலன்ஸ் போல ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார். பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியோடு அந்த இளைஞர் ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் சிக்கியவரை ஆபத்தான நேரத்தில் சாதுரியமாக மீட்ட கேரள முதலமைச்சரின் இந்த மனிதநேயச் செயலின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in