CRIME
“ஐயோ கடவுளே.. பள்ளி கழிவறையில் மயங்கிக் கிடந்த 11-ஆம் வகுப்பு மாணவி..” பினாயில் குடித்து நேர்ந்த விபரீதம்.. கதறி துடிக்கும் பெற்றோர்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!!
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள கொத்தப்பள்ளி மண்டல கஸ்தூர்பா காந்தி மகளிர் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவி ஒருவர் பள்ளி கழிவறையில் பினாயில் குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. எம். லிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தலாஹரி ராஜு – ஜெயலட்சுமி தம்பதியரின் மூத்த மகளான அந்த மாணவி, கடந்த புதன்கிழமை அன்று பள்ளி கழிவறையில் மயங்கிக் கிடந்துள்ளார். சக மாணவிகள் இதனைப் பார்த்து பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், அவரிடமிருந்து ஒரு தற்கொலைக் கடிதத்தையும் மீட்டுள்ளனர். ஆனால், அந்தக் கடிதத்தைத் தங்கள் மகள் எழுதவில்லை என மறுக்கும் பெற்றோர், பள்ளியில் மாணவிகளுக்கு இடையே நிலவும் சில விசித்திரமான குழுப் பழக்கவழக்கங்களும், அதனால் ஏற்படும் சண்டைகளும், மன உளைச்சலுமே இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதே பள்ளியில் இதற்கு முன்பும் சில மாணவிகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த வழக்கின் உண்மையான பின்னணியைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
