CRIME
“அடக்கடவுளே.. காதலனை நம்பி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…” 4 மாதக் குழந்தையின் தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் இஜ்ஜத்நகர் காவல் எல்லைக்குட்பட்ட சைனிக் காலனியில், 22 வயதான பாவனா கோஸ்வாமி என்ற இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாவனாவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக அபிஷேக் சக்சேனா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இருவரின் குடும்பத்தினரும் இவர்களது சாதி மறுப்புத் திருமணத்திற்குச் சம்மதிக்காததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 4 மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
நேற்று மாலை வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, பாவனா அறையின் உள்ளே தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த இஜ்ஜத்நகர் போலீசார் பாவனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த நேரத்தில் ஹோட்டலில் வேலை செய்யும் அவளது கணவர் அபிஷேக் வீட்டில் இல்லை என்றாலும், போலீசார் உடனடியாக அவசர நடவடிக்கை எடுத்து அவனைக் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாவனாவின் தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவரவில்லை; போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
