கொஞ்சம் கூட அறிவே இல்லையா.? தண்டவாளத்தில் சிக்கிய தார் கார்… நூலிழையில் உயிர் தப்பிய பெண் ஓட்டுநர்.. ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொஞ்சம் கூட அறிவே இல்லையா.? தண்டவாளத்தில் சிக்கிய தார் கார்… நூலிழையில் உயிர் தப்பிய பெண் ஓட்டுநர்.. ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

கேரளாவில் இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பெண் ஓட்டுநர் ஒருவரின் கார் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு குடும்பத்தினர் மஹிந்திரா தார் காரில் பயணம் செய்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இரயில்வே கேட்கேட் மூடப்படும் சமயத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றதால், சாலையோரம் இருந்த பள்ளத்தில் காரின் டயர் சிக்கிக்கொண்டது. பெண் ஓட்டுநர் எவ்வளவு முயற்சி செய்தும் வாகனத்தை வெளியில் எடுக்க முடியாததால் பரபரப்பு ஏற்பட்டதுடன், ஓட்டுநரின் கவனக்குறைவே இதற்கு காரணம் என அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அதே நேரத்தில் அந்த வழித்தடத்தில் இரயில் ஒன்று வரவிருந்ததால், உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர், தண்டவாளத்தில் கார் சிக்கியிருக்கும் தகவலை இரயில் ஓட்டுநருக்குத் தெரிவித்தார். இதன் காரணமாக, இரயில் தனது முந்தைய நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு, சுமார் அரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தண்டவாளத்தில் சிக்கியிருந்த காரை மீட்டு அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, காரில் இருந்தவர்கள் பத்திரமாக உயிர் தப்பினர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in