இளம் நடிகை வழக்கு: மருத்துவர் கைப்பேசியில் 12 பெண்களின் ஆபாச வீடியோக்கள் – அதிர வைக்கும் உண்மைகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

இளம் நடிகை வழக்கு: மருத்துவர் கைப்பேசியில் 12 பெண்களின் ஆபாச வீடியோக்கள் – அதிர வைக்கும் உண்மைகள்..!!

Published

on

கேரளாவின் கொச்சியில் இளம் நடிகையின் உறவினரைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஜான்சன் வர்கீஸின் கைப்பேசியை ஆய்வு செய்ததில், 12 பெண்களின் ஆபாசக் காட்சிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள மருத்துவர் ஜான்சன் வர்கீஸைப் பிடிக்கக் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் விரைவில் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவுள்ளது.

அதேவேளையில், தன்னைத் தாக்கிப் பணத்தைப் பறிக்க முயன்றதாகக் கூறி மருத்துவர் ஜான்சன் வர்கீஸ் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட இளம் நடிகை மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவைத் தொடர்ந்து நடிகை மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட நடிகை மற்றும் அவரது கூட்டாளிகள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். எனினும், இந்த வழக்கில் தீவிர விசாரணை நிலுவையில் உள்ளதாலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளதாலும் அவர்களுக்குப் பிணை வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் காவல்துறை வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in