கேள்வி கேட்டா இப்படியா பண்ணுவீங்க.? சினிமா ஊழியரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்.. சென்னையில் மீண்டும் பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கேள்வி கேட்டா இப்படியா பண்ணுவீங்க.? சினிமா ஊழியரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்.. சென்னையில் மீண்டும் பயங்கரம்..!!

Published

on

சென்னை திருமுல்லைவாயிலில் சாலையை மறித்து நின்ற கும்பலைத் தட்டிக் கேட்ட சினிமா ஊழியர் சஞ்சய் என்பவரை, ஒரு கும்பல் இருசக்கர வாகனங்களில் துரத்திச் சென்று கத்தியால் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர தாக்குதலில் சஞ்சய்யின் தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த திருமுல்லைவாயில் போலீசார், தீவிர விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட ஆசிக், பாலா, பாலாஜி, கணேஷ், ராம், விக்னேஷ் ஆகிய 6 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in