“அடப்பாவமே.. சபரிமலையிலேயே கை வச்சுட்டாங்களா..? 55 சவரன் தங்கக் கிரீடத்தை சுட்டுட்டு போலி கிரீடத்தை வச்சது யார்..? தீவிர விசாரணையில் அதிகாரிகள்..!!” – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவமே.. சபரிமலையிலேயே கை வச்சுட்டாங்களா..? 55 சவரன் தங்கக் கிரீடத்தை சுட்டுட்டு போலி கிரீடத்தை வச்சது யார்..? தீவிர விசாரணையில் அதிகாரிகள்..!!”

Published

on

கேரளா மாநிலத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குத் தமிழ்நாடு, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் தாங்கள் நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறினால் கோவிலுக்குப் பல்வேறு காணிக்கைகளைச் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் 445.78 கிராம் (சுமார் 55.72 சவரன்) எடை கொண்ட தங்கக் கிரீடத்தைச் சபரிமலை ஐயப்பனுக்குக் காணிக்கையாக வழங்கினர். இந்த விவரம் கோவில் பதிவேடுகளிலும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் திருவாபரணங்களைச் சரிபார்க்கும் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையிலான திருவாபரணங்களைச் சரிபார்க்கும் குழுவினர் நடத்திய ஆய்வின்போது, பக்தர்கள் வழங்கிய 55 சவரன் உண்மையான தங்கக் கிரீடத்திற்குப் பதிலாக அங்கே போலி கிரீடம் ஒன்று மாற்றி வைக்கப்பட்டிருந்தது அம்பலமாகி உள்ளது.

Advertisement

பாதுகாப்பு அறையில் இந்த தங்கக் கிரீடம் சிசிடிவி கேமரா கண்காணிப்பு இல்லாத பகுதியில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. திருவாபரணப் பட்டியலில் போலி கிரீடம் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உண்மையான தங்கக் கிரீடம் என்னவானது என்பது குறித்தும், இதில் ஈடுபட்டுள்ள நபர்கள் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in