LATEST NEWS
“திமுக பிரமுகர் முத்துக்குமாருக்கு முன் ஜாமீன் கிடையாது..” ரூ.100 கோடி மெகா மோசடி வழக்கு.. . உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி எதிர்ப்பு..!!
திமுக பிரமுகர் முத்துக்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. தனியார் பள்ளிகளுக்குத் தேவையான பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மாபெரும் மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மெகா மோசடிப் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைது நடவடிக்கைக்குப் பயந்து திமுக நிர்வாகியான முத்துக்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார்.
இவ்வழக்கில் முத்துக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் ஜாமீன் மனுவை நிராகரிக்கக் கோரியுள்ள காவல்துறை, இந்த மோசடி தொடர்பாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளதாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் நபர்களிடம் இருந்து அசுர வேகத்தில் பணத்தை சுருட்டிவிட்டுத் தப்பியோடியுள்ள இவரைத் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை கடுமையாகப் பாதிக்கப்படும் என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
