LATEST NEWS
“பயந்து ஓடிட்டோம்னு சொல்வாங்கப்பா” இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவால் கொந்தளித்த உதயநிதி… வேட்பாளர்களை அறிவித்து ஸ்டாலின் கொடுத்த மெகா ஷாக்..!!
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா அல்லது புறக்கணிக்குமா என்ற நீண்ட காலக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இ.பரந்தாமன் அவர்களும், தாராபுரம் (தனி) தொகுதிக்கு மகளிர் அணி நிர்வாகியான வழக்கறிஞர் திருமதி எஸ்.சுகன்யா அவர்களும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்குள் நிலவி வந்த தயக்கங்களை உடைத்து, இந்த அதிரடி முடிவை எடுத்ததன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மிகத் தெளிவான அரசியல் வியூகம் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே அதிமுக வசம் இருந்தவை என்பதாலும், அங்குள்ள சூழலைக் கருத்தில் கொண்டும், பிரதான அரசியல் போட்டியாளரான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஏதேனும் ஒரு தொகுதியில் தோல்வியடைந்தால் கூட நமக்குச் சாதகமே என்ற கணக்கீட்டில் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என்ற கருத்து திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலரிடையே நிலவி வந்தது. ஆனால், இந்த விவாதங்களைக் கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையாகக் கொந்தளித்து, புறக்கணிப்பு என்ற முடிவை முற்றிலுமாக மறுத்து நிராகரித்துள்ளார். இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது என்பது பொதுவெளியில் நாம் பயந்து ஓடிவிட்டோம் என்ற தவறான விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என்றும், அது கட்சிக்குக் கடுமையான பின்விளைவுகளைத் தேடித்தரும் என்றும் அவர் மிக அழுத்தமாகத் தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.
தேர்தலில் களம் காண்பது என்று முடிவெடுத்ததோடு நின்றுவிடாமல், இரண்டு தொகுதிகளையும் வெற்றியை நோக்கி வழிநடத்தும் முழுப் பொறுப்பையும் உதயநிதி அவர்களே நேரடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். படித்த, மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கொண்ட தகுதியான நபர்களை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில், அவரே முழு அதிகாரம் செலுத்தி சட்ட அறிவும் களப்பணியும் கொண்ட இரு சிறந்த வழக்கறிஞர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் இந்த அதிரடித் திட்டம் மற்றும் வலுவான வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் புறக்கணிப்பு எண்ணத்தில் இருந்த உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே புதிய உத்வேகத்தையும் பாய்ச்சலையும் ஏற்படுத்தி, களப்பணியை நோக்கி அவர்களை விரைவாக நகர்த்தியுள்ளது.
