LATEST NEWS
நீட் உட்பட 3 தேர்வு வினாத்தாள் கசிவில் எனக்கு தொடர்பு இருக்கு… உண்மையை ஒப்புக்கொண்ட மாஃபியா தலைவன்… நாடே அதிர்ச்சியில்..!!
பீகார் மாநிலத்தின் பிரபல வினாத்தாள் கசிவு மாஃபியா தலைவனான சஞ்சீவ் , பொருளாதாரக் குற்றப் பிரிவின் காவல் விசாரணை ரிமாண்டில் பல அதிர்ச்சி தரும் உண்மைகளை ஒப்புக் கொண்டுள்ளார். பாட்னா பியூர் சிறையில் இருந்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், நாட்டின் முக்கியப் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களைத் தனது கூட்டமைப்பு எவ்வாறு சட்டவிரோதமாகக் கசியவிட்டது என்ற முழு பின்னணியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
விசாரணையின் போது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு, பீகார் காவலர் தேர்வு (CSBC-2023) மற்றும் பீகார் ஆசிரியர் தேர்வு (BPSC TRE-3) ஆகியவற்றின் வினாத்தாள்களைத் திருடி கசியவிட்டதில் தனக்கு நேரடிப் பங்கு இருந்ததை சஞ்சீவ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனது ‘சால்வர் கேங்’ நெட்வொர்க், இடைத்தரகர்கள் மற்றும் இதற்குப் பின்னணியில் நடந்த பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய விவரங்களையும் அதிகாரிகளிடம் அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய நீட்-2024 வினாத்தாள் கசிவு வழக்கில், அண்மையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவருக்குக் க்ளீன் சிட் வழங்கி விடுதலை செய்திருந்த நிலையில், தற்பொழுது 2017 பழைய வழக்குத் தொடர்பாக EOU நடத்திய அதிரடி விசாரணையில் அவர் மாட்டிக்கொண்டுள்ளார். சஞ்சீவ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யப் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் தற்பொழுது பல மாநிலங்களில் தங்களது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
