LATEST NEWS
“நான் சினிமாவுக்கே போயிடுறேன்… அங்க நிறைய காசு கிடைக்குது..” மேடையில் கொந்தளித்த சீமான்..!!
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுராந்தகத்தில் பேசியபோது, நடித்தால்தான் ஓட்டுப் போடுவார்கள் என்றால், தான் மீண்டும் நடிக்கவேப் போவதாகத் தெரிவித்துள்ளார். மேடையில் தான் பேசிவிட்டு இறங்கிச் செல்லும்போது, சிலர் வந்து ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் சூப்பராக நடித்திருப்பதாகப் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், “விளங்குமா இந்த நாடு?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மீண்டும் நடிக்கச் சென்றால் நிறைய காசு கிடைப்பதாகவும், அது நன்றாகத் தான் இருக்கும் என்றும் அவர் கூறினார். அதேவேளையில், மக்களுக்காகச் சிந்தும் ஒரு சொட்டுக் கண்ணீரும் வீணாகப் போவதில்லை என்றும் சீமான் அந்தப் பொதுக்கூட்டத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
