LATEST NEWS
நீட் மட்டும்தான் உலகமா..? “கார்பெண்டர், பெயிண்டர் வேலைக்கு ஆள் இல்லை” சட்டப்பேரவையில் வெடித்த குலக்கல்வி சர்ச்சை – அமைச்சர் நிர்மல்குமாரை அதிர வைத்த முத்துராஜா எம்.எல்.ஏ..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியான திமுக தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்தது. நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் சந்திக்கும் பாதிப்புகள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமைகள் குறித்தும் அவையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, கடந்த காலக் கருத்துக்களைச் சுட்டிக்காட்டி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “தற்போதைய முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பாக, ‘நீட் மட்டும்தான் உலகமா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்; அதே போன்றதொரு கருத்தை அமைச்சர் அருண்ராஜும் பொதுவெளியில் பதிவு செய்திருந்தார்” என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மற்றொரு அமைச்சர் மீது நேரடியாகக் குலக்கல்விப் புகாரைச் சுமத்தினார். “அமைச்சர் நிர்மல்குமார் ஒருபடி மேலே சென்று, ‘படிப்பதற்கு நீட் மட்டும்தான் இருக்கிறதா? கார்பெண்டர், பெயிண்டர் போன்ற பணிகளுக்கு இங்கு ஆட்கள் இல்லை’ என்று பேசியுள்ளார்; இது மறைமுகமாகக் குலக்கல்வி முறையை ஆதரித்துப் பேசுவது போல் அமைந்துள்ளது” என்று முத்துராஜா அவையில் குற்றம்சாட்டினார். இதனால் பேரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
