“எனக்கு யாருமே இல்ல…”குடும்பத்தையே பறிகொடுத்துட்டு… மூளைக் கட்டியோடு தனியாகப் போராடும் இளைஞர்…! இணையத்தைக் கண்ணீரில் ஆழ்த்திய வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எனக்கு யாருமே இல்ல…”குடும்பத்தையே பறிகொடுத்துட்டு… மூளைக் கட்டியோடு தனியாகப் போராடும் இளைஞர்…! இணையத்தைக் கண்ணீரில் ஆழ்த்திய வைரல் வீடியோ..!!

Published

on

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் @lazy_legend_guy என்ற கணக்கை வைத்துள்ள இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள மிகக் கொடூரமான வாழ்வியல் அனுபவக் காணொளி, இணையவாசிகளின் மனதை உருக வைப்பதாக அமைந்து வைரலாகி வருகிறது. திறந்தவெளியில் நின்றபடி மிகுந்த மனவேதனையுடன் பேசும் அந்த இளைஞர், இயற்கையும் இறைவனும் தன் குடும்பத்தை ஒன்றன்ப பின் ஒன்றாகப் பறித்துக் கொண்ட சோகக் கதையைக் கூறியிருப்பது அனைவரையும் உரைய வைத்துள்ளது. முதலில் தன் அன்புச் சகோதரி, அதன்பின் தந்தை, இறுதியாகத் தாயாரையும் இழந்து அநாதையாக நிற்கும் சூழல் தனக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த இளைஞர் அதில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து தவிக்கும் வேளையில், அவருக்கு மற்றொரு பேரடியாகத் தானும் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டுப் போராடி வருவதாகக் கூறியுள்ளார். வீடியோவில் தனது நோய்க்காகப் பயன்படுத்தும் மருந்துக் பாட்டில்களான Eptoin 50 மற்றும் Valparin 200 ஆகியவற்றை உயர்த்திக் காட்டும் அவர், மூளைக் கட்டியோடு சேர்த்து வலிப்பு நோயினாலும் அவதிப்படுவதாகவும், இதுவரை மூன்று முறை அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு சிகிச்சையளிப்பதற்காக வேலூர் வரை சென்றதாகக் குறிப்பிடும் அவர், தனது கவனிப்பிற்கு இருந்த தாயாரும் இறந்துவிட்ட நிலையில் தற்போது தனியாகவே வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறார்.

Advertisement

https://www.instagram.com/reel/DbsuT4-AyFc/?utm_source=ig_web_button_share_sheet

“என்னை நினைத்துப் பாருங்கள், நான் முற்றிலும் தனியாக உள்ளேன். நானே மருத்துவரிடம் செல்ல வேண்டும், நானே அறுவைச் சிகிச்சையை எதிர்கொள்ள வேண்டும், நானே தலையை அமுக்கித் தைலம் தேய்த்துக் கொள்ள வேண்டும்… ஒரு நோயாளிக்கு உதவியாக யாராவது ஒருவர் கூடவே இருப்பார்கள், ஆனால் எனக்கு யாருமில்லை” என வேதனையுடன் தனது இயலாமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதற்குப் பதிவிட்டு, அந்த இளைஞருக்கு ஆறுதல் கூறியும், அவருக்கு உதவ முன்வந்தும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in