“என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?!” பசியில் துடித்த நோயாளிக்கு Zomato கொடுத்த பேரதிர்ச்சி… கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?!” பசியில் துடித்த நோயாளிக்கு Zomato கொடுத்த பேரதிர்ச்சி… கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!!

Published

on

102°F காய்ச்சலால் காலை முதல் எதுவும் சாப்பிடாமல் அவதிப்பட்டு வந்த தனது நண்பனுக்காக, இளைஞர் ஒருவர் சொமேட்டோ செயலி மூலம் சுமார் ரூ.350 மதிப்பில் இட்லி மற்றும் சாம்பார் ஆர்டர் செய்துள்ளார். உடல்நிலை சரியில்லாத நண்பனுக்கு சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உணவை வரவழைத்த நிலையில், வீட்டிற்கு வந்த சாம்பார் மிகவும் தண்ணீராகவும், இட்லிகள் கெட்டியாகவும், பிசுபிசுப்பாகவும், பலத்த புளிப்பு வாடையுடனும் இருந்துள்ளன. இது குறித்து ஆன்லைனில் புகார் அளித்தும், உணவு விநியோக நிறுவனத்திடமிருந்து உரிய அல்லது திருப்திகரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை.

एक युवक ने 102°F बुखार से पीड़ित दोस्त के लिए Zomato से करीब ₹350 की इडली-सांभर ऑर्डर की, क्योंकि उसने सुबह से कुछ नहीं खाया था।

खाना पहुंचा तो सांभर पानी जैसा और इडली मोटी, चिपचिपी व तेज खट्टी गंध वाली निकली। शिकायत के बावजूद उचित समाधान नहीं मिला।

आखिरकार बीमार दोस्त को पहले… pic.twitter.com/y2uqTeDJTb— YuG 🍁 (@Yg123uz) August 10, 2026

இறுதியில், பசியாலும் காய்ச்சலாலும் தவித்த அந்த நண்பனுக்கு மாத்திரை கொடுப்பதற்காக, வேறு வழியின்றி பிஸ்கட்களை மட்டுமே உணவாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செலவழித்த 350 ரூபாய் பணத்தை விடவும், மிகவும் அவசியமான ஒரு சூழ்நிலையில் ஆர்டர் செய்த உணவுப் பொருள் கூடப் பயன்படாமல் போனதும், காய்ச்சலில் தவித்த நண்பனுக்கு சரியான உணவு கிடைக்காமல் போனதுமே அந்த இளைஞருக்கு பெரும் மனவேதனையைக் கொடுத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in