LATEST NEWS
“கண்ணீரை அடக்க முடியாத நொடிகள்..” கையில விலங்கோட பிறந்த குழந்தையைத் தூக்கிய தந்தை… கண்ணீருடன் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை… உறைந்துபோன போலீஸ்.. மனதை உருக வைத்த சம்பவம்..!!
போலீசாருக்குப் பயந்து தலைமறைவாக இருந்த திருடன் ஒருவன், தனது மனைவிக்குக் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியைக் கேட்டவுடன், எதைப் பற்றியும் யோசிக்காமல் நேராக மருத்துவமனைக்கு விரைந்து வந்தான். திருடன் கண்டிப்பாகத் தன் மனைவியைப் பார்க்க மருத்துவமனைக்கு வருவான் என்பதை முன்கூட்டியே கணித்த காவல்துறையினர், பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருந்தனர். அங்கு வந்த திருடன், காவலர்களைக் கண்டதும் பிரசவ அறைக்கு முன்பாகவே கண்ணீருடன் சரணடைந்து, தனது கைகளிலேயே விலங்கைப் போட்டுக்கொண்டான். பிறக்கப்போகும் தன் குழந்தைக்குத் தந்தையாகத் தான் என்ன முகத்தைக் காட்டப் போகிறோம் என்ற குற்ற உணர்ச்சியில் அவன் உள்ளுக்குள் குமுறி அழுதான்.
पुलिस से छुप कर भागने वाला यह चोर अपनी पत्नी की डिलीवरी की खबर सुनकर
सीधा अस्पताल पहुंचा पुलिस को पता था कि चोर अस्पताल जरूर आएगा ।
चोर ने आते ही लेबर रूम के बाहर खड़ी पुलिस के सामने सरेंडर कर दिया और रोते रोते हथकड़ियां पहन लीं ,
अंदर ही अंदर पछता रहा था कि वह अपने नवजात बेटे… pic.twitter.com/SHuTqWMe9V— Haji Nizamuddin Abbasi (@HajiNizamuddin3) August 10, 2026
சிறிது நேரத்தில் அவனுக்கு பெண் குழந்தை பிறந்ததும், அந்தப் பிஞ்சு குழந்தையைக் காவலர் அவனது கைகளில் எடுத்துக் கொடுத்தபோது, அவனால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதான். “இன்றோடு என் தவறான பாதையை, குற்றச் செயல்களை என்றென்றைக்குமாக விடுத்துத் திருந்துகிறேன்” என்று நெகிழ்ச்சியோடு வாக்களித்தான். ஒரு குழந்தையின் வருகை, கடின மனம் கொண்ட ஒரு குற்றவாளியை உணர்ச்சிவசப்பட வைத்து நல்வழிப்படுத்திய இந்தத் தந்தையின் தூய்மையான அன்பும் மாற்றமும் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
