“என் கையை விடுங்க ப்ளீஸ்..! ஓடும் ரயிலில் திருடனைப் பயணிகள் லாக் செய்த மாஸ் சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் கையை விடுங்க ப்ளீஸ்..! ஓடும் ரயிலில் திருடனைப் பயணிகள் லாக் செய்த மாஸ் சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

பீகார் மாநிலம் பாகல்பூரில் ஓடும் ரயிலில் இருந்து பயணியின் கைபேசியைப் பறிக்க முயன்ற திருடன் ஒருவன், பயணிகள் கையைப் பிடித்ததால் ஜன்னலுக்கு வெளியே பல கிலோமீட்டர் தூரம் காற்றில் தொங்கியபடி சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகல்பூர்-தானாபூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பாகல்பூர் சந்திப்பில் இருந்து புறப்பட்டு வேகம் எடுக்கத் தொடங்கியபோது, ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பயணியிடம் இருந்து மொபைல் போனைப் பறிக்க ஒரு திருடன் முயன்றுள்ளான். ஆனால், உஷாரான பயணிகள் உடனடியாக அவனது கையைப் பிடித்துக் கொண்டதால், ரயில் வேகமெடுத்த நிலையில் திருடன் ரயிலின் ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி வெளியே தொங்க வேண்டியதாயிற்று.

சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் ஓடிக் கொண்டிருந்தபோது, உயிருக்கு பயந்த திருடன் “தன் கையை விட்டுவிடுமாறு” கதறிக்கொண்டு ரயிலுக்கு வெளியே தொங்கியபடியே உயிர்ப்பிச்சை கேட்டுள்ளான். ரயிலை அடுத்த நிலையத்தில் நிறுத்தி, அவனைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பயணிகள் கையைத் தளர்த்தாமல் பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சுல்தான்கஞ்ச் அருகே உள்ள ரத்தன்பூர் பகுதியில் ரயில் சென்றபோது, அந்தத் திருடன் வலுக்கட்டாயமாகப் பயணிகளின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு கீழே விழுந்ததில் படுகாயமடைந்துள்ளான். இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பாதுகாப்புப் படையினரின் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in