CRIME
‘திரிஷ்யம் 3’ பாணியில் பிளான்… 2,000 கி.மீ பயணம் செய்து தந்தையை கோடாரியால் வெட்டிய கொடூரம்… ஒரே ஒரு சின்ன தவறால் சிக்கிய மகன்..! குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
பாலிவுட்டின் பிரபல குற்றவியல் திரில்லர் திரைப்படமான ‘திரிஷ்யம் 3’ படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு, அதைப் போலத் திட்டம் தீட்டி, 2,000 கிலோமீட்டர் பயணம் செய்து சொந்தத் தந்தையையே கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்த 26 வயது இளைஞனைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் தர்வா கிராமத்தைச் சேர்ந்த ரகுவீர் சாஹ்னி (50) என்பவர் ஜூலை 26 நள்ளிரவில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது மகன் சிவ சங்கர் (26) கோடாரியால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடினார். குஜராத் மாநிலம் சூரத்தில் பணியாற்றி வந்த சிவ சங்கர், ‘திரிஷ்யம் 3’ படத்தைப் பார்த்துவிட்டுக் குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காகத் தனது மொபைல் போனை அணைத்துவிட்டு 2,000 கி.மீ பயணம் செய்து ஊருக்கு வந்து இக்கொடூரத்தைச் செய்துள்ளார்.
கொலை செய்துவிட்டு மீண்டும் சூரத்திற்குத் தப்பிச் சென்ற சிவ சங்கர், தான் போலீசிடம் மாட்டவே மாட்டோம் என நம்பியிருந்தார். ஆனால், கொலைக்கு பின் அவர் தனது மனைவிக்குச் செய்த ஒரே ஒரு போன் காலை வைத்து போலிஸார் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, சூரத்தில் வைத்து மடக்கிப் பிடித்தனர். சினிமா பாணியில் திட்டம் தீட்டியும் ஒரு சிறிய தவறைச் செய்து போலிசிடம் மாட்டிக்கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
