நீல நிற டிரம் கொடூரத்தை மிஞ்சிய கொடூரம்.. காதலுக்கு தடையாய் இருந்த தந்தை.. கொன்று 3 போர்வைகளில் சுற்றிப் பெட்டிக்குள் அடைத்த மகள்..! நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

நீல நிற டிரம் கொடூரத்தை மிஞ்சிய கொடூரம்.. காதலுக்கு தடையாய் இருந்த தந்தை.. கொன்று 3 போர்வைகளில் சுற்றிப் பெட்டிக்குள் அடைத்த மகள்..! நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேசம் மாநிலம் எட்டாவா பகுதியில், காதலுக்கு இடையே தடையாக இருந்த தந்தையை, அவரது மைனர் மகளும் அவளது காதலனும் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசிராம் காலனியைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் கத்தேரியா என்ற செக்யூரிட்டி கார்டு தனது இளைய மகளுடன் வசித்து வந்தார். கடந்த 5 மாதங்களாக மகளுக்கு ஒருவருடன் தொடர்பு இருந்ததை தந்தை கண்டித்ததால், ஆத்திரமடைந்த மகளும் அவளது 21 வயது காதலனும் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.

திட்டத்தின்படி, கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இரவில் தந்தையின் டீயில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துள்ளனர். அவர் மயங்கிய பிறகு கயிட்டியால் கட்டி, கத்தியால் குத்தியும், அம்மிக்கல்லால் தலையில் தாக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க உடலை மறைப்பதற்காக 3 கம்பளிப் போர்வைகளில் சுற்றி வீட்டில் இருந்த இரும்புப் பெட்டிக்குள் திணித்து மூடியுள்ளனர். மேலும், அவரது செல்போனையும் அருகில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

Advertisement

சில நாட்களாக தந்தை மற்றும் மகளிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லாததால், சந்தேகமடைந்த மூத்த மகள் தனது மாமனாருடன் வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்ததுடன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. உள்ளே சென்று பார்த்தபோது பெட்டிக்குள் தந்தை சடலமாகக் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி, மைனர் மகளையும் அவளது காதலனையும் கைது செய்து, கொடூர கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in