LATEST NEWS
“என் மகள் வேண்டும்…” முதலமைச்சர் இல்லத்தின் முன் மயங்கி விழுந்த தாய்.. வீதிக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரியின் குடும்ப சண்டை… பரபரப்பு பின்னணி…!!
பீகார் மாநிலம் ககரியா மாவட்டத்தின் எஸ்பியாக பணியாற்றி வரும் 2021-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி பானுபிரதாப் சிங்கின் குடும்பப் பிரச்சினை, தற்போது அம்மாநில முதலமைச்சர் சாம்ராட் சௌதரியின் இல்லத்தின் முன்பு தர்ணா போராட்டமாக வெடித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு இடையே, அண்மைக் காலமாக கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தங்களது 6 வயது பெண் குழந்தை தற்போது தந்தை பானுபிரதாப் சிங்குடன் இருக்கும் நிலையில், தாயான பூஜா சிங்கிற்கு குழந்தையைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் மனவேதனை அடைந்த பூஜா சிங், தனது மகளை மீட்டுத் தருமாறு கோரி பாட்னாவில் உள்ள முதலமைச்சர் சாம்ராட் சௌதரியின் இல்லத்தின் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பசி மற்றும் தாகத்தின் காரணமாக “என் மகள் வேண்டும்” என்று கதறியபடியே அவர் அங்கு மயக்கமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாட்னா காவல்துறையினர், அவரை மீட்டு அழைத்துச் சென்று தற்போதைய நிலவரப்படி இரு குடும்பத்தாருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
