LATEST NEWS
“லைக்குகளுக்காக இப்படியா..?” ரீல்ஸ் மோகத்தால் உயிரைப் பணயம் வைத்து இளைஞர் செய்த பகீர் காரியம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
பீகார் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டே நேரடியாகப் பெட்ரோல் குடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பல்க்கில் கையில் பெட்ரோல் வாங்கி தண்ணீர் போல அந்த வாலிபர், கேமராவைப் பார்த்தபடியே குடிக்கிறார். லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காகத் தனது உயிரையே பணயம் வைத்து இந்த ஆபத்தான செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் துணிகரமான மற்றும் முட்டாள்தனமான வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞரின் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பெட்ரோல் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த எரிபொருட்களை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தானது என்பதால், இதுபோன்ற ஆபத்தான ரீல்ஸ் மோகத்திற்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட இளைஞர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
