மிராக்கிள்.. 9 வயதில் தொலைந்த சிறுவன்… 31 ஆண்டுகள் கழித்து கண் முன்னே நின்ற அதிர்ச்சி.. மகனை கட்டியணைத்து கதறிய தாய்.. வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மிராக்கிள்.. 9 வயதில் தொலைந்த சிறுவன்… 31 ஆண்டுகள் கழித்து கண் முன்னே நின்ற அதிர்ச்சி.. மகனை கட்டியணைத்து கதறிய தாய்.. வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

Published

on

பீகார் மாநிலம் கதிஹாரில், 31 ஆண்டுகளுக்கு முன்பு 9 வயதில் குடும்பத்தை விட்டுப் பிரிந்த பிந்து யாதவ் என்ற நபர், தற்போது ‘அப்துல் ஜப்பார்’ என்ற பெயருடன் தனது சொந்த வீட்டிற்குத் திரும்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. தனது 9 ஆவது வயதில் தற்செயலாக ஒரு ரயிலில் ஏறித் தூங்கிய சிறுவன் பிந்து யாதவ், மேற்கு வங்காளத்திற்குச் சென்று சேர்ந்துள்ளார். அங்கு ஆதரவற்று இருந்த அவனது நிலையைக்கண்டு, ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் அவரைத் தத்தெடுத்து, அன்பு காட்டி வளர்த்துள்ளனர். வளர்ந்து பெரியவனான பிறகு அவருக்குத் திருமணமும் நடந்து, தற்போது மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இருப்பினும், தனது சொந்தக் குடும்பத்தைக் காண வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் இருந்து வந்த நிலையில், சமூக வலைத்தளங்களின் உதவியால் 31 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தக் குடும்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். 31 வருடங்கள் கழித்து, முற்றிலும் மாறிய அடையாளத்துடன் தனது மகன் தன் கண் முன்னே நிற்பதைக் கண்ட அவரது வயதான தாய், கண்ணீர் விட்டு கதறியபடி அவனைக் கட்டியணைத்துக் கொண்டார். இந்த உணர்வுப்பூர்வமான மற்றும் நெகிழ்ச்சியான குடும்ப மறுசந்திப்பு கதிஹார் பகுதி மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in