LATEST NEWS
காசு தர முடியாது தம்பி..!” பில் போட்ட பிறகு எகிறிய ஊழியர்… நீதிமன்றம் போவேன் என மிரட்டிய சிறுவன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!
பயணத்தின் போதோ அல்லது உணவகங்களிலோ உணவுப் பொருட்களை வாங்கும் போது, கடைக்காரர்கள் கேரி பேக்கிற்கு தனியாகப் பணம் வசூலிப்பது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு உணவு வாங்கச் சென்ற ஒரு சிறுவனிடம், கவுண்டரில் இருந்த ஊழியர் கேரி பேக்கிற்கு கூடுதலாக ரூ.5 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்தச் சிறுவன் காரணம் கேட்க, “இது எங்களது கடையின் விதிமுறை” என்று ஊழியர் பதிலளித்துள்ளார். சிறுவன் அந்தப் பையைக் உற்று நோக்கியபோது, அதில் அந்தக் கடையின் பெயரும் சின்னமும் அச்சிடப்பட்டிருப்பதைக் கவனித்தான். தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்த்துவிட்டு பில் போடும் வரை காத்திருந்தான். பில் வந்ததும், அதில் கேரி பேக்கிற்கான ரூ.5 சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டு, கடையின் விளம்பரம் அச்சிடப்பட்ட பைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது விதிகளுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டினான்.
ஆனால், ஊழியரோ பில் ஏற்கனவே போடப்பட்டுவிட்டதாகக் கூறி பணத்தைக் ரத்து செய்ய மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடையாத சிறுவன், கடையின் மேலாளரை அழைக்குமாறும், தேவைப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப் போவதாகவும் உறுதியாகக் கூறினான். சிறுவனின் இந்த சட்டபூர்வமான மற்றும் தைரியமான பேச்சைக் கேட்டுப் பயந்த ஊழியர், சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே சென்று மேலாளரிடம் பேசிவிட்டுத் திரும்பினார். பின்னர், “பரவாயில்லை தம்பி, நாங்கள் இந்த கட்டணத்தைத் தள்ளுபடி செய்கிறோம்” என்று கூறி, கேரி பேக்கிற்கான ரூ.5 கட்டணத்தை நீக்கிவிட்டு, புதிய பில்லை சிறுவனிடம் வழங்கினார். நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இருந்தால், இது போன்ற தேவையற்ற கூடுதல் கட்டணங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.
