CRIME
“அவளைக் கண்டுபிடிச்சு தாங்க..” சுவரொட்டி ஒட்டி போலீசில் நாடகமாடிய கணவன்.. 10 மாத குழந்தையுடன் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. விசாரணையில் உடைந்த பயங்கர உண்மை.. திடுக்கிடும் பின்னணி..!!
பீகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த சினேகலதா என்ற நர்சிங் அதிகாரி, தன் 10 மாதக் குழந்தையுடன் லிவ்-இன் உறவில் இருந்த சத்யபிரகாஷ் என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யபிரகாஷிற்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், சினேகலதா தன்னை அதிகாரப்பூர்வமாக மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படியும் குழந்தையின் எதிர்காலத்திற்கு அங்கீகாரம் தரும்படியும் வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பப் பிரச்சினையே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
கடந்த அக்டோபர் 8-ம் தேதி, சினேகலதாவைக் கான்பூருக்கு ஷாப்பிங் அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார் சத்யபிரகாஷ். அதன் பிறகு சினேகலதா வீடு திரும்பாத நிலையில், தன் மீதான சந்தேகத்தைத் திசைதிருப்ப சத்யபிரகாஷே காவல் நிலையத்தில் புகார் அளித்து, அவரைத் தேடும் சுவரொட்டிகளையும் அச்சடித்துள்ளார். எனினும், அவரது செயல்பாடுகளில் சந்தேகமடைந்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சினேகலதாவைக் கொலை செய்து உடலை ஆற்றில் வீசியதை அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தின் பச்னடா பகுதியில், ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் சினேகலதாவின் உடலை வீசியதாகக் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த ஆற்றுப் பகுதியில் முதலைகள் அதிகம் இருப்பதால் உடல் முழுமையாகத் தின்னப்பட்டு, எந்த ஆதாரமும் சிக்காது என அவர் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தேசியப் பேரிடர் மீட்புப் படையின் உதவியுடன் படகுகள் மூலம் தீவிரமாகத் தேடியும் இதுவரை உடல் மீட்கப்படாத நிலையில், சினேகலதாவின் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
