CRIME
பட்டப்பகலில் நடந்த கொடூரம்.. வெள்ளை காரில் வந்த எமன்கள்! சாமானிய வீட்டு சிறுமிக்கு நேர்ந்த கதி.. உறைந்துபோன நெட்டிசன்கள்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பீகாரில் பகல் நேரத்தில் சாலையில் நடந்து சென்ற சிறுமி ஒருவர், வெள்ளை நிற காரில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, விஐபி-க்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே உடனடியாக பாதுகாப்பு மற்றும் நீதி கிடைக்கும் என்றும், சாமானிய மக்களின் துன்பங்களை அரசோ அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாஜக தலைமையிலான சாம்ராட் சவுத்ரி அரசில் குற்றவாளிகள் மற்றும் குண்டர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சியான ஆர்ஜேடி உள்ளிட்ட அமைப்புகள் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன. கடந்த சில வாரங்களில் சிறுமிகளுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாகியுள்ள நிலையில், பாஜாக ஆளும் மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இத்தகைய குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான எஃப்.ஐ.ஆர் மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
