CRIME
‘உச்சகட்ட கொடூரம்.. தரையில் துடித்த 10 வயது சிறுமி… படுக்கையில் கூலாக ஓய்வெடுத்த கொடூர குடும்பம்.. நெஞ்சை உலுக்கிய சிசிடிவி காட்சி..!!
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் ராணிபூரில் உள்ள ஒரு பெரிய ஹவேலியில், பாத்திமா புரோ என்ற 10 வயது சிந்தி சிறுமி கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் வெளியான சிசிடிவி காட்சிகளில், அந்தச் சிறுமி படுக்கைக்கு அருகில் தரையில் விழுந்து வலியால் துடிக்கும் போது, குற்றஞ்சாட்டப்பட்ட பீர் ஆசாத் ஷா என்பவரும் அவரது குடும்பத்தினரும் எந்தவித சலனமுமின்றி தங்களது படுக்கையில் ஓய்வெடுக்கும் காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக முதன்மைக் குற்றவாளியான ஆசாத் ஷா மற்றும் அவரது மனைவி ஹினா ஷா ஆகியோருக்கு எதிராக கொலை மற்றும் சித்திரவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் இந்த வழக்கை மூடிமறைக்க உள்ளூர் அதிகாரிகளும் காவல்துறையினரும் முயன்றதாகவும், அப்பகுதியில் செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மறைமுக ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாகவே குற்றவாளிகள் தப்பிக்க முயன்றனர் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது
