LATEST NEWS
“வசமா மாட்டிகிட்டேன்” திருமணமான 7-வது நாளே விவாகரத்து… ரூ.50 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட புதுப்பெண்.. வரன் தேடும் செயலி மூலம் ஏமாந்த கணவனின் அதிர்ச்சி கதை..!!
ஜீவன்சாதி (Jeevansathi) வரன் தேடும் செயலி மூலம் ஒரு பெண்ணைச் சந்தித்த நபர், அவரே தனக்கு ஏற்ற சரியான துணை என நம்பி, பல லட்ச ரூபாய் செலவழித்து மிகவும் பிரமாண்டமான முறையில் அவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமான வெறும் 7 நாட்களிலேயே, அந்தப் பெண் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரியதோடு, அதற்குப் இழப்பீடாக (Alimony) 50 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் அதிரடியாக டிமாண்ட் செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை முன்வைத்து, தற்காலச் சட்டங்கள் மற்றும் நீதிமன்றங்களின் நடைமுறைகள் சில பெண்களுக்கு ஒரு மிகச்சிறந்த வருவாய் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டன என்ற கடுமையான விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. “திருமணம் செய்துகொள்ளுங்கள், சில நாட்களிலேயே விவாகரத்து கேட்டு லட்சக்கணக்கிலோ அல்லது கோடிக்கணக்கிலோ ஜீவனாம்சம் பெற்றுக்கொள்ளுங்கள்; அதோடு போனஸாக மாதாந்திர பராமரிப்புத் தொகையையும் வசூலித்துக் கொள்ளுங்கள்” என்ற ரீதியில் இந்தச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், சில பெண்கள் ஆண்கள் மீது பொய் கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வைப்பதாக மிரட்டி, சமரசத் தொகையாக லட்சக்கணக்கான ரூபாயைப் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக இந்த விமர்சனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய போக்கு உண்மையாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களின் நோக்கத்தையே சிதைப்பதாக நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
