இது என்னடா புது கூத்து.. ஊர் முழுக்க முந்திரி கத்லி ஸ்வீட் கொடுத்த கணவன்… பின்னணியில் இருக்கும் விசித்திரக் காரணம்.. இணையத்தில் வைரல் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

இது என்னடா புது கூத்து.. ஊர் முழுக்க முந்திரி கத்லி ஸ்வீட் கொடுத்த கணவன்… பின்னணியில் இருக்கும் விசித்திரக் காரணம்.. இணையத்தில் வைரல் சம்பவம்..!!

Published

on

பொதுவாக விவாகரத்துக்குப் பிறகு தம்பதியினர் சோகத்தில் மூழ்குவது வழக்கம், ஆனால் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற மகிழ்ச்சியில் நபர் ஒருவர் ரூ.5000 மதிப்புள்ள முந்திரி கத்லிஇனிப்புகளை ஊர் மக்களுக்குப் பஞ்சுப் மிட்டாய் போல விநியோகித்துக் கொண்டாடிய விசித்திரச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மனைவி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வந்ததாகவும், இதனால் “உன் மனைவி சமூக வலைதளங்களில் நடனமாடுகிறாள்” என்று ஊர்க்காரர்கள் அனைவரும் தன்னை ஏளனம் செய்து குத்திக் காட்டியது தனது மனதை ஆழமாகக் காயப்படுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் அவமானங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே அவர் விவாகரத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அந்த நபர், “தனது வாழ்க்கையில் இன்னும் 50 ஆண்டுகள் பாக்கி உள்ளதாகவும், இனிமேல் ஒரு சாதாரண பெண்ணைப் பார்த்து மறுமணம் செய்து கொள்ளப் போவதாகவும்” தனது எதிர்காலத் திட்டம் குறித்துப் பகிர்ந்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற பெயரில் நடனமாடி, குடும்பத்தின் மானத்தை வாங்கும் ஒரு பெண்ணை இனி ஒருபோதும் தனது வீட்டிற்குள் மருமகளாக அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதள மோகத்தால் ஒரு குடும்ப வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ள இந்தச் சம்பவம், தற்போது நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் கலவையான கருத்துகளையும் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in