ரூ.35-க்கு மின்சாரம் வாங்கினா ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்கிறது அரைவேக்காட்டுத்தனம்.. மின்சாரக் கொள்முதல் சர்ச்சைக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரூ.35-க்கு மின்சாரம் வாங்கினா ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்கிறது அரைவேக்காட்டுத்தனம்.. மின்சாரக் கொள்முதல் சர்ச்சைக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடி பதிலடி..!!

Published

on

தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய மின்சார வாரியம் டெண்டர் கோரியுள்ள விவகாரம், தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாக மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்கினால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறுவது முற்றிலும் அரைவேக்காட்டுத்தனமான கருத்து” என்று சாடியுள்ளார். மேலும், தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறை மற்றும் கடுமையான தேவை நிலைமையானது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் சவாலான ஒன்றாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

மத்திய தொகுப்பு மற்றும் என்எல்சி நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய மின்சாரம் வராததாலும், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின்சாரம் சரிந்ததாலும் இந்தத் தற்காலிகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும், மின்வெட்டைத் தவிர்க்கவும் அக்டோபர் 15 முதல் 31 வரை மாலை 6 முதல் இரவு 12 மணி வரையிலான உச்ச பயன்பாட்டு நேரத்தில் மட்டுமே இந்த மின்சாரம் வெளிச்சந்தையில் வாங்கப்பட உள்ளதாகவும், இதனால் ஒரு நாளைக்கு ரூ.5 கோடி மட்டுமே கூடுதல் செலவாகும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in