நீங்க எப்படி பதவியேத்தீங்கன்னு ஊருக்கே தெரியும்… ADMK மாஜிக்கள் சொன்னதை தான் நானும் சொன்னேன்… 1 கோடி நோட்டீஸுக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ‘மாஸ்’ பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீங்க எப்படி பதவியேத்தீங்கன்னு ஊருக்கே தெரியும்… ADMK மாஜிக்கள் சொன்னதை தான் நானும் சொன்னேன்… 1 கோடி நோட்டீஸுக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ‘மாஸ்’ பதிலடி..!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீஸுக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுகவை, எடப்பாடி பழனிசாமி ஏமாற்றி, துரோகம் செய்து அபகரித்துக் கொண்டதாக அவர் தனது பதிலில் மிகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி எப்படி பதவியேற்றார் என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு பகிரங்கமான உண்மை என்று அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். மேலும், தாம் புதிதாக எதையும் கூறவில்லை என்றும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களே எடப்பாடி பழனிசாமி மீது சுமத்திய பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகளையே தாம் சுட்டிக்காட்டிப் பேசியதாகவும் அவர் தனது பதில் நோட்டீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

எடப்பாடி பழனிசாமி தனது சுயநல அரசியலுக்காக அதிமுக என்ற பேரியக்கத்தை திமுகவிடம் முழுமையாக அடைமானம் வைத்துவிட்டார் என்றும் அவர் காரசாரமாகச் சாடியுள்ளார். அவதூறு நோட்டீஸைக் கண்டு தாம் பின்வாங்கப் போவதில்லை என்றும், சட்ட ரீதியாகவே இந்த விவகாரத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அமைச்சரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in