CRIME
“வா பாப்பா பிரசாதம் வாங்கி தருகிறேன்..” சிறுமியை தனி அறைக்கு அழைத்து பூசாரி செய்த வெறிச்செயல்.. வீடியோவை வெளிநாட்டிற்கு விற்ற கொடூரம்.. நீதிமன்றத்தின் மரண அடி தீர்ப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கிராமத்துக் கோயிலில், பிரசாதம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிகளைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பூசாரி ஷ்யாம் பிஹாரிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், ரூ.1.43 லட்சம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடியோக்களைப் பதிவு செய்து, அவற்றை ஆன்லைன் மூலம் வெளிநாட்டினருக்குப் பணத்திற்காக விற்பனை செய்த அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் அம்பலமானது. இது குறித்து சர்வதேச காவல்துறையான இன்டர்போல் கொடுத்த ரகசிய எச்சரிக்கையின் பேரில், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கடந்த 2025 ஜூன் 17 அன்று வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைக் கைது செய்து தீவிர விசாரணையில் இறங்கியது.
வழக்கை மிக விரைவாகக் கையாண்ட சிபிஐ அதிகாரிகள், ஒரு மாதத்திற்குள்ளாகவே விசாரணையை முடித்து 2025 ஆகஸ்ட் 18 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுமிகள், தடயவியல் நிபுணர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்ட 14 முக்கிய சாட்சிகள் அரசுத் தரப்பில் ஆஜர்படுத்தப்பட்டனர்; மேலும் குற்றவாளியின் மொபைலில் இருந்து மீட்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த மதுரா கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரஜேஷ் குமார், பூசாரி செய்த குற்றத்தை உறுதி செய்து இந்த கடுமையான தண்டனையை வழங்கியதோடு, அபராதத் தொகை முழுவதையும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கோயிலுக்கு வரும் சிறுமிகளின் நம்பிக்கையைத் துரோகம் செய்து, சர்வதேச அளவில் இந்த ஆபாச வீடியோக்களை விற்ற பூசாரிக்கு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
