“நெக்லஸ் வேணும் மாமா…” ரீல்ஸ் எடுக்க ரொக்கம் கேட்ட புதுப்பெண்.. நள்ளிரவில் 11 லட்சத்துடன் கணவனுக்கு ‘நாமம்’ போட்ட லேடி.. ராஜஸ்தானில் அரங்கேறிய பகீர் மோசடி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நெக்லஸ் வேணும் மாமா…” ரீல்ஸ் எடுக்க ரொக்கம் கேட்ட புதுப்பெண்.. நள்ளிரவில் 11 லட்சத்துடன் கணவனுக்கு ‘நாமம்’ போட்ட லேடி.. ராஜஸ்தானில் அரங்கேறிய பகீர் மோசடி..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் தாராம்கரில், பணக்கார வாலிபர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், சில நாட்களிலேயே நகைகள் மற்றும் பெருந்தொகையைக் கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவரிடம் நெக்லஸ் கேட்டு ஆசை காட்டிய அந்தப் பெண்ணின் விருப்பத்திற்காக, கணவர் பல வழிகளில் முயற்சி செய்து 11 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைச் திரட்டி வந்து கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை ஆன்லைனில் மாற்றுவதற்குப் பதிலாக, ரீல்ஸ் எடுப்பதற்காக ரொக்கமாகக் கேட்கவே கணவரும் பணத்தை நேரில் கொடுத்துள்ளார்.

கணவன் வீட்டில் இருந்த போது, அட்ஜஸ்ட் செய்து வைத்திருந்த 11 லட்சம் ரூபாய் ரொக்கம், கணவர், மாமியார் மற்றும் நாத்தனாரின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் என அனைத்தையும் அந்தப் பெண் ரகசியமாகச் சேர்த்து வைத்துள்ளார். அன்றைய இரவு முழுவதும் கணவருடன் இயல்பாகப் பேசிப் பழகிய அவர், அதிகாலை 4 மணியளவில் யாருக்கும் தெரியாமல் அந்த 11 லட்சம் ரூபாய் பணம் மற்றும் விலையுயர்ந்த நகைகளுடன் தப்பி ஓடியுள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தீவிர விசாரணை நடத்தி 5 முதல் 6 நாட்களுக்குள் அந்தப் பெண்ணைக் கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in